சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2021 12:57 AM IST (Updated: 8 Sept 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

மதுரை, வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை
மதுரை, வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல ஆண்டுகளாக கடும் பணிச்சுமையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் காலத்தில் அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் ஓய்வூதிய தொகையாக வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்.. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கான கோரிக்கைகளை பட்ஜெட்டில் மானிய கோரிக்கையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கோரிக்கைகளை கூறி கோஷமிட்டனர். 
ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு ஒன்றிய தலைவர் அர்ஜுனன், ஒன்றிய செயலாளர் தங்கசாமி, மேற்கு ஒன்றிய துணைத்தலைவர் சீத்தாலெட்சுமி, செயலாளர் வசந்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், சத்துணவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பங்கேற்றனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கால முறைஊதியம் வழங்கிட கோரியும் ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு, ஓய்வு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் தமிழ்வாணன், தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி ஒன்றியக்கிளை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கி அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வீரமலை தலைமை தாங்கினார். அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை செயலாளர் வேல்மயில் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.  தீர்மானங்களை விளக்கி சங்க மாவட்ட துணைத்தலைவர் சூசைநாதன் பேசினார். முடிவில் ராஜகுமாரி நன்றி கூறினார்.

Next Story