கிணற்றில் தவறி விழுந்த மயில்கள் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த மயில்கள் மீட்பு
x
தினத்தந்தி 8 Sept 2021 12:58 AM IST (Updated: 8 Sept 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த மயில்கள் மீட்பு

உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே சிரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. விவசாயியான இவரது தோட்டத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தனது 5 குஞ்சுகளுடன் மயில் தவறி விழுந்தது. இந்த மயில்கள் அனைத்தும் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதனை கண்ட உடனடியாக ஆண்டிச்சாமி உசிலம்பட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் தங்கம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தாய் மயில் மற்றும் அதன் 5 குஞ்சுகளை உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story