வாலிபர் பலி
ஆண்டிப்பட்டி அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியாகினார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது 30), பவுன்ராஜ் (40). நேற்று முன்தினம் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் க.விலக்கு என்னுமிடத்துக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஓட்டியதாக கூறப்படுகிறது. கண்டமனூர் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். பவுன்ராஜீக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story