காட்டுயானை சிகிச்சை பலனின்றி சாவு


காட்டுயானை சிகிச்சை பலனின்றி சாவு
x
காட்டுயானை சிகிச்சை பலனின்றி சாவு
தினத்தந்தி 8 Sept 2021 9:24 PM IST (Updated: 8 Sept 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

காட்டுயானை சிகிச்சை பலனின்றி சாவு

இடிகரை

கோவை அருகே பாலமலை செல்லும் வழியில் நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலையடிவாரத்தில் திருமாலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மாரம்மாள் என்பவரது தோட்டம் அருகே நேற்று காலை 9 மணியளவில் 17 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று வந்தது. உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த யானை அந்த இடத்திலேயே நின்றது. 


இதுகுறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக பெரியநாயக்கன் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ரேஞ்சர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் அந்த யானை கீழே படுத்துவிட்டது.

இதனை தொடர்ந்து வனத்துறையினர் உடனடியாக அந்த யானைக்கு மருந்து, உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இந்த யானை கடந்த சிலநாட்களாகவே இந்த பகுதியில் சுற்றி கொண்டு இருந்தது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தோலாம்பாளையம் அருகே ஊருக்குள் வந்த இந்த யானையை வனத்துறையினர் துரத்தும்போது, திடீரென இந்த யானை திருப்பி தாக்கியதில் வனக்காப்பாளர் மோகன்ராஜ் மற்றும் வேட்டைதடுப்பு காவலர் செந்தில்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். 

இதில் மோகன்ராஜூக்கு இடுப்பு எலும்பு முறிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இறந்துபோன இந்த  யானையின் உடல்கூறு ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story