கார், ஆட்டோ டிரைவர்களை கண்டறிய தனிப்படையினர் விசாரணை
கார், ஆட்டோ டிரைவர்களை கண்டறிய தனிப்படையினர் விசாரணை
கோவை
கோவை சின்னியம்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காரில் இருந்து பெண் பிணம் சாலை யில் வீசப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியா கின. இதையடுத்து அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கார் விபத்தில் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்த 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள், பெண் பிணம் வீசப்பட்ட காரை ஓட்டிய டிரைவர் யார்?. அந்த காரை பின்தொடர்ந்து வந்த ஆட்டோவை ஓட்டிய டிரைவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது :-
பெண் பிணம் வீசப்பட்டதாக கூறப்படும் காரின் பதிவு எண் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அது, திருவள்ளூர் மாவட்டத் தில் பதிவான கார் ஆகும். அந்த கார் விமான நிலையம் வரை பயணித்த இடங்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகிறோம். அந்த காரின் டிரைவர் யார் என்பது குறித்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் இருந்து பெண் பிணம் சாலையில் விழுந்த போது பின்னால் ஆட்டோ ஒன்று வருகிறது. அந்த ஆட்டோ டிரைவர் யார்? என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலைக்கு வாய்ப்பு இல்லை,
விபத்து காரணமாக இறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது. எனவே அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story