திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
கோவை
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குந்தன்குமார் (வயது 26). இவர் கோவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் தொழிலாளியாக பணிபுரிந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கோவை வந்த இவர் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே செல்போனில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் தனது அண்ணனிடம் முறையிட்டார். அவர், குந்தன் குமாரை சமாதானப்படுத்தினார். இதனிடையே தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதன்காரணமாக அவர் கடந்த 3 நாட்களாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருந்து உள்ளார்.இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குந்தன்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story