ஆசிரியர்கள் நிர்வாக இடமாறுதலில் பலகோடி ரூபாய் முறைகேடா?-உயர்அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நிர்வாக வசதிக்காக ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதா? என்பது ெதாடர்பாக உயர் அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை முனிச்சாலையை சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது-
ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான கலந்தாய்வை தமிழக அரசு நடத்தி வருகிறது. நிர்வாக அடிப்படையிலும் ஆசிரியர்கள் இடமாற்றம் நடக்கிறது.
நிர்வாக அடிப்படையில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படும்போது பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
10 ஆண்டுகள் வெளிமாவட்டங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள், தங்களின் சொந்த ஊருக்கு இடமாறுதல் கேட்டு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சொந்த மாவட்டத்திற்கு இடமாறுதல் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆனால் பணியில் சேர்ந்து 5 மாதம் ஆனவர்களுக்கு முறைகேடாக இடமாறுதல் வழங்குகின்றனர். இதுதொடர்பான தகவல்கள்் அவ்வப்போது வெளியாகின்றன.
வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அதன்பேரில் கடந்த 2019-ம் ஆண்டு பல்வேறு வழிகாட்டுதல்கள் அடங்கிய உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்தது. அதன்படி 2019-ம் ஆண்டு கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் இடமாற்றம் நடந்தது. அதன்பின் கொரோனா தொற்றை காரணம் காட்டி, கலந்தாய்வு நடக்கவில்லை. ஆனால் நிர்வாக அடிப்படையில் ஏராளமான ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை முறையாக பின்பற்றாதது சட்டத்துக்கு எதிரானது.
எனவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக அடிப்படையில் பணியிட மாற்றம் செய்த ஆசிரியர்கள் குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர்கள் இடமாறுதல் செய்வது வழக்கமான நடைமுறை தான். கொரோனா தொற்றின் காரணமாக சமீபத்தில் பொது கலந்தாய்வு நடத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து உள்துறைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், லஞ்சஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் மாதம் 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
=======
நிர்வாக வசதிக்காக ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதா? என்பது ெதாடர்பாக உயர் அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நிர்வாக வசதிக்காக இடமாறுதல்
ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான கலந்தாய்வை தமிழக அரசு நடத்தி வருகிறது. நிர்வாக அடிப்படையிலும் ஆசிரியர்கள் இடமாற்றம் நடக்கிறது.
நிர்வாக அடிப்படையில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படும்போது பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
10 ஆண்டுகள் வெளிமாவட்டங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள், தங்களின் சொந்த ஊருக்கு இடமாறுதல் கேட்டு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சொந்த மாவட்டத்திற்கு இடமாறுதல் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆனால் பணியில் சேர்ந்து 5 மாதம் ஆனவர்களுக்கு முறைகேடாக இடமாறுதல் வழங்குகின்றனர். இதுதொடர்பான தகவல்கள்் அவ்வப்போது வெளியாகின்றன.
வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அதன்பேரில் கடந்த 2019-ம் ஆண்டு பல்வேறு வழிகாட்டுதல்கள் அடங்கிய உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்தது. அதன்படி 2019-ம் ஆண்டு கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் இடமாற்றம் நடந்தது. அதன்பின் கொரோனா தொற்றை காரணம் காட்டி, கலந்தாய்வு நடக்கவில்லை. ஆனால் நிர்வாக அடிப்படையில் ஏராளமான ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை முறையாக பின்பற்றாதது சட்டத்துக்கு எதிரானது.
எனவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக அடிப்படையில் பணியிட மாற்றம் செய்த ஆசிரியர்கள் குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவு
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர்கள் இடமாறுதல் செய்வது வழக்கமான நடைமுறை தான். கொரோனா தொற்றின் காரணமாக சமீபத்தில் பொது கலந்தாய்வு நடத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து உள்துறைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், லஞ்சஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் மாதம் 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
=======
Related Tags :
Next Story