நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் துவரிமான் நான்கு வழி சாலை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்கள். பின்னர் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்த போது, வாடிபட்டியை சேர்ந்த முத்துமுருகன் மகன் முத்துராஜா(வயது 19), செல்லத்துரை மகன் கண்ணன்(21) என்றும், பெண்ணிடம் நகை பறிப்பில் தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.