புதிதாக 16 பேருக்கு கொரோனா


புதிதாக 16 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Sept 2021 12:42 AM IST (Updated: 9 Sept 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மதுரை,

மதுரையில் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 12 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது.இதுபோல், நேற்று 11 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 8 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 809 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 163 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 74 வயதுடைய ஆண் இறந்தார்.
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று ஒரு நாள் உயர்ந்தும், ஒரு நாள் குறைந்தும் வருகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசு அறிவித்த நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
---------------

Next Story