உசிலம்பட்டி,
எழுமலை அருகே உள்ள எம்.கல்லுப்பட்டி. பகுதியில் திருட்டுத்தனமாக புகையிலை ெபாருட்கள் விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எம்.கல்லுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகஜேந்திரன் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செல்வம் (40) சூலப்புரத்தை சேர்ந்த சின்ராஜ் (45) ஆகிய 2 பேரும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து 150 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.