படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மன வருத்தத்தில் இருந்தார்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவருடைய மனைவி ஆனந்தி (37). இவர்களுக்கு அஜய் (19), ஆகாஷ் (13) என்ற மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆனந்தியின் தந்தை முஸ்தபா 6 நாட்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். அதனால் ஆனந்தி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் அஜய், சாலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தனது தம்பி ஆகாஷை அழைத்துவர சென்றார். அப்போது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்ட ஆனந்தி மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.
தற்கொலை
இதை பார்த்த அவரது மாமனார் தங்கவேல் (80) கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட ஆனந்தியை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆனந்தி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story