நன்னடத்தை ஆணையை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட 2 பேருக்கு 284 நாட்கள் சிறை


நன்னடத்தை ஆணையை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட 2 பேருக்கு 284 நாட்கள் சிறை
x
தினத்தந்தி 9 Sept 2021 11:53 AM IST (Updated: 9 Sept 2021 11:53 AM IST)
t-max-icont-min-icon

நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 284 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியதற்கிணங்க பாலுசெட்டிசத்திரம் போலீஸ்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தாமல் கிராமத்தை சேர்ந்த துளசிராமன் (வயது 24), மணிமாறன் (28) ஆகியோர் நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சீபுரம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் ஆர்.டி.ஓ. மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் துளசிராமன் மற்றும் மணிமாறன் இருவரும் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து தாமல் கலங்கல் அருகே, முட்டவாக்கத்தை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

இதுகுறித்து அவர்கள் இருவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 284 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

Next Story