பூந்தமல்லியில் நடமாடும் கொரோனோ தடுப்பூசி முகாம்


பூந்தமல்லியில் நடமாடும் கொரோனோ தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 9 Sep 2021 7:01 AM GMT (Updated: 2021-09-09T12:31:13+05:30)

கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, பூந்தமல்லி சுகாதாரத்துறை சார்பில் பூந்தமல்லி நகராட்சியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கவிழா நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு நடமாடும் கொரோனா தடுப்பூசி குழுவை தொடங்கி வைத்தார். பூந்தமல்லி நகராட்சி வளாகத்தில் இருந்து 8-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் குழு புறப்பட்டது. இந்த வாகனம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும், அதன் அவசியம் குறித்தும் தெரிவிக்க உள்ளனர்.

இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story