திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் மீது வழக்கு


திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Sep 2021 7:10 AM GMT (Updated: 9 Sep 2021 7:10 AM GMT)

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன்பு நேற்று முன்தினம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்று, வீட்டுமனைப்பட்டா போன்றவற்றை வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாதிச்சான்று, வீட்டுமனை பட்டா வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதை தொடர்ந்து திருவள்ளூர் டவுன் போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட மலைவாழ் மக்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story