சாலையில் இறந்து கிடந்த பெண் யார்


சாலையில் இறந்து கிடந்த பெண் யார்
x
சாலையில் இறந்து கிடந்த பெண் யார்
தினத்தந்தி 9 Sep 2021 12:23 PM GMT (Updated: 9 Sep 2021 12:23 PM GMT)

சாலையில் இறந்து கிடந்த பெண் யார்

கோவை

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே கடந்த சில நாட்களுக்கு முன் சாலையில் பெண் பிணம் ஒன்று கிடந்தது. 

அந்த பெண்ணின் உடல் மீது வாகனங்கள் ஏறி சென்றதால், உடல் உருக்குலைந்தது. இதையடுத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் காலை நேரத்தில் ஒரு கார் செல்வதும், அதில் இருந்து பெண் பிணம் சாலையில் விழும் காட்சிகளும் பதிவாகின. ஆனால் அந்த பெண்ணின் பிணம் காருக்குள் இருந்து சாலையில் வீசப்பட்டதா? அல்லது சாலை விபத்தில் சிக்கிய பெண், காரில் சிக்கி இழுத்து வரப்பட்டு சாலையில் விழுந்ததா என்பது தெளிவாக தெரியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட காரின் பதிவு எண்ணை ஆய்வு செய்து, டிரைவரை தேடி வருகின்றோம்.

இந்த நிலையில் இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து இன்னும் போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து காணாமல் பெண்களின் புகைப்படங்களை வைத்து இறந்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பிற மாவட்டங்களுக்கும் இறந்த பெண் குறித்த தகவல்களை போலீசார் அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் தீபக்தாமோர் கூறியதாவது:-
இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
அந்த பெண்ணிற்கு 60 வயதிற்கு மேல் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். தற்போதைய நிலையில் அந்த பெண் விபத்தில் சிக்கி இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அந்த பெண் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.



Next Story