மான் வேட்டையாடியவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது


மான் வேட்டையாடியவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது
x
தினத்தந்தி 9 Sept 2021 7:24 PM IST (Updated: 9 Sept 2021 7:24 PM IST)
t-max-icont-min-icon

சென்னம்பட்டி வனப்பகுதியில் மான் வேட்டையாடியவரை நாட்டு் துப்பாக்கியுடன் வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து இறைச்சி மற்றும் தேக்கு மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னம்பட்டி வனப்பகுதியில் மான் வேட்டையாடியவரை நாட்டு் துப்பாக்கியுடன் வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து இறைச்சி மற்றும் தேக்கு மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 வேட்டை
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகம்  சின்ன மலை அடிவாரம் பகுதியில் வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையிலான வனஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில்  ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.
வனத்துறையினர் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள லக்கம்பட்டி கிராமம்  காட்டுவளவை சேர்ந்த குருநாதன் மகன் மாதேசன் (வயது 50) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். கடந்த  3 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் ஒரு மானை நாட்டு துப்பாக்கியால் வேட்டையாடி அதன் இறைச்சியை காய வைத்து விற்பனை செய்ததாக வனத்துறையினரிடம் அப்போது அவர் தெரிவித்தார்.
கைது-மான் இறைச்சி பறிமுதல்
மேலும் அவர், அதேபகுதியில் தேக்கு மரத்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  வெட்டி விற்பதற்காக வனப்பகுதியில் பதுக்கி வைத்ததையும், அதனை எடுக்க வந்ததையும் ஒப்புக்கொண்டார்.இதுெதாடர்பாக வனத்துறையினர் அவரை கைது செய்தனர். 
அவரிடம் இருந்து மான் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட நாட்டு துப்பாக்கி, காய வைத்த மான் இறைச்சி, தீயில் வாட்டிய மான் கால்கள், மற்றும் வெட்டப்பட்ட தேக்கு மர கட்டைகள் 6, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் மாதேசனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story