புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது
புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது
கணபதி
கோவை காந்திபுரம் 2-வது வீதி பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் விற்பனை செய்து வருவதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரத்தினபுரி போலீசார் அந்தப்பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்த அயனன்கான் (வயது32), ஆர்.ஜி.வீதியை சேர்ந்த ராணாசிங் (36), உமத்சிங் (26), ஆகிய 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 15 கிலோ புகையிலை பொருட்கள், ரொக்கம் ரூ.20 ஆயிரத்து 500 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story