மரம் முறிந்து விழுந்தது5 பேர் படுகாயம்
மரம் முறிந்து விழுந்தது5 பேர் படுகாயம்
கோவை
விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக உள்ளது. இதன்காரணமாக கோவையில் உள்ள பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அதிகளில் கூட்டம் காணப்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு நடைபெற்றது.
பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் ஓய்வு எடுப்பதற்காக அலுவலக வளாகத்தில் நிழற்கூரை அமைக்கப்பட்டு, அதில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.
இதன் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடமும் உள்ளது. கூட்டம் காரணமாக பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் இந்த நிழற்கூரையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவரை ஒட்டி உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நின்றிருந்த ராட்சத மே பிளவர் மரம் மதியம் 12.30 மணி அளவில் திடீரென்று முறிந்து நிழற்கூரையின் மீது விழுந்தது. இதில் நிழற்கூரையின் ஒருபகுதி பலத்த சேதமடைந்தது. இதில் அங்கு அமர்ந்து இருந்த 2 பெண்கள் உள்பட 5 பேர்படு காயமடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.மேலும் மரம் விழுந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
மரத்தின் அடிப்பகுதி வலுவிழந்து காணப்பட்டதால், முறிந்து விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மின்சார வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர்.
Related Tags :
Next Story