சாலையோர பள்ளத்தில் இறங்கிய லாரி


சாலையோர பள்ளத்தில் இறங்கிய லாரி
x
தினத்தந்தி 9 Sep 2021 4:50 PM GMT (Updated: 9 Sep 2021 4:51 PM GMT)

சாலையோர பள்ளத்தில் இறங்கிய லாரி.

பந்தலூர்,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து எரிபொருள் ஏற்றிக்கொண்டு கூடலூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை பாலக்காட்டை சேர்ந்த கிரீஸ்(வயது 40) என்பவர் ஓட்டினார். பின்னர் அங்கிருந்து எர்ணாகுளத்துக்கு லாரி திரும்பி வந்து கொண்டு இருந்தது. ஆனால் நாடுகாணி வழியாக செல்வதற்கு பதிலாக வழி தவறி பந்தலூருக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து நாடுகாணி நோக்கி திரும்பி வந்தது.

நீர்மட்டம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இறங்கியது. ஆனால் கீழே விழவில்லை. மாறாக தொங்கி கொண்டு இருந்தது. அந்த பள்ளத்தில் குடியிருப்புகள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக லாரி கவிழாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் டிரைவர் உயிர் தப்பினார். 

இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு, பொதுமக்கள் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. இதனால் அந்த வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Next Story