600 வீடுகளுக்கு 24 மணிநேர குடிநீர் இணைப்பு


600 வீடுகளுக்கு 24 மணிநேர குடிநீர் இணைப்பு
x
600 வீடுகளுக்கு 24 மணிநேர குடிநீர் இணைப்பு
தினத்தந்தி 9 Sept 2021 10:28 PM IST (Updated: 9 Sept 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

600 வீடுகளுக்கு 24 மணிநேர குடிநீர் இணைப்பு

கோவை

கோவை நகரில் 24 மணிநேர குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிறுவாணி, பில்லூர் முதல் மற்றும் 2-வது குடிநீர் திட்டங்கள் மூலம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 

மேலும் நகருக்கு கூடுதல் குடிநீர் வினியோகம் செய்ய பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர்தொட்டிகள் கட்டும் பணிகள் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 24 மணிநேர குடிநீர் திட்டத்துக்காக நகரில் பல்வேறு இடங்களில் பணிகள் நடக்கிறது.24 மணிநேர குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது

நகரம் முழுவதும் 24 மணிநேர குடிநீர் திட்டத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக தெலுங்குபாளையம், ஜெயராம்நகரில் 600 வீடுகளுக்கு நவீன குடிநீர் மாணியுடன் கசிவு ஏற்படாத அளவுக்கு நவீன குழாய் பதிக்கப்பட்டு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி கட்டண அடிப்படையிலேயே குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆரம்ப கட்டணமாக 15 ஆயிரம் லிட்டர் வரை ரூ.100, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லிட்டர்வரை உபயோகிப்பவர்களுக்கு 1000 லிட்டருக்கு ரூ.6, 20 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஒன்றரை லட்சம் லிட்டர்வரை உபயோகிப்பவர்களுக்கு 1000 லிட்டருக்கு ரூ.8, ஒன்றரை லட்சம் லிட்டருக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு 1000 லிட்டருக்கு ரூ.10 என்றவிகிதாச்சாரப்படி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இதுதவிர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் தேவை உள்ளவர்கள், வணிக பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கு தனித்தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டப்படி குடிநீர் வீணாகாது. தேவையான அளவுக்கு வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். அனைவருக்கும் சரிசமமான குடிநீரை வழங்க முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story