டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை கேட்டு வழக்கு

x
தினத்தந்தி 9 Sept 2021 10:49 PM IST (Updated: 9 Sept 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை,

புயலால் பாதிப்பு
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தரவிமலநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
காவிரி டெல்டா பகுதியில் கொரோனாவால் விவசாயப் பணிகள் முறையாக நடக்கவில்லை. நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக விவசாயப்பயிர்கள் பெரிதும் பாதித்தன. கடந்த ஆண்டு பெய்த மழையால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
ரூ.345 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. மாநில அளவிலான குழு கூடி பிரதம மந்திரி திட்டத்தின் காப்பீட்டில் இழப்பீடு பெறுவதற்கான பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணம் தொடர்பாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
குழு
தஞ்சை மாவட்டத்தின் 59 வருவாய் கிராமங்களில் கடந்த குறுவை பருவத்திற்கான பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்படவில்லை.
எனவே கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான குறுவை, சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விவசாய காப்பீட்டிற்கான இழப்பீட்டுத் தொகையை உரிய வட்டியுடன் வழங்கவும், பயிர்காப்பீடு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட அளவில் குறைதீர் அலுவலரை நியமிக்கவும், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாட்டை தேசிய அளவிலான குழு கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனு குறித்து மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அக்டோபர் மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.மதுரை, செப்.10-
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புயலால் பாதிப்பு
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தரவிமலநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
காவிரி டெல்டா பகுதியில் கொரோனாவால் விவசாயப் பணிகள் முறையாக நடக்கவில்லை. நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக விவசாயப்பயிர்கள் பெரிதும் பாதித்தன. கடந்த ஆண்டு பெய்த மழையால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
ரூ.345 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. மாநில அளவிலான குழு கூடி பிரதம மந்திரி திட்டத்தின் காப்பீட்டில் இழப்பீடு பெறுவதற்கான பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணம் தொடர்பாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
குழு
தஞ்சை மாவட்டத்தின் 59 வருவாய் கிராமங்களில் கடந்த குறுவை பருவத்திற்கான பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்படவில்லை.
எனவே கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான குறுவை, சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விவசாய காப்பீட்டிற்கான இழப்பீட்டுத் தொகையை உரிய வட்டியுடன் வழங்கவும், பயிர்காப்பீடு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட அளவில் குறைதீர் அலுவலரை நியமிக்கவும், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாட்டை தேசிய அளவிலான குழு கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனு குறித்து மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அக்டோபர் மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story