மாவட்ட செய்திகள்

தக்காளி விலை கிடுகிடு உயர்வு + "||" + Rise in tomato prices at Kinathukadavu vegetable market

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

காய்கறி சந்தை 

கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறி பொருட்களை கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.

கடந்த வாரம் இந்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு ஏலம் போனது. தற்போது கிணத்துக்கடவு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைவாக இருந்தது. 

தக்காளி விலை உயர்வு 

அதன்படி  சந்தைக்கு 3 டன் தக்காளியே வந்து இருந்தது. இதனால் அதன் விலை கிடுகிடுவென கிலோவுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.13-க்கு விற்பனையானது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

இந்த சந்தையில் விற்பனையாக காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:- 
பச்சை மிளகாய் ரூ.33, பீக்கன்காய் ரூ.20, பீட்ரூட் ரூ.12, பாகற்காய் ரூ.15, சுரைக்காய் ரூ.12, வெண்டைக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.30, புடலங்காய் ரூ.10, கத்தரிக்காய் ரூ.29, முள்ளங்கி ரூ.20, கோவக்காய் ரூ.22-க்கும்,  பொறியல் தட்டைபயிறு ரூ.30-க்கும் ஏலம் போனது.