புதிதாக 5 பேருக்கு கொரோனா


புதிதாக 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Sep 2021 5:31 PM GMT (Updated: 9 Sep 2021 5:31 PM GMT)

மதுரையில் நேற்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மதுரை,
மதுரையில் நேற்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 3 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 14 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 9 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 823 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 151 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.

Next Story