இன்ஸ்பெக்டர் வசந்தியை 23-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு
ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைதானஇன்ஸ்பெக்டர் வசந்தியை 23-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை,
சிவகங்கையை சேர்ந்த அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்பட சிலர் மீது குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். சமீபத்தில் கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த வசந்தியை போலீசார் கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.அவர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடியானது. இந்தநிலையில் நேற்று மாலையுடன் அவரது நீதிமன்ற காவல் முடிந்தது.
இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் மதுரை கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே வசந்தி தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வருகிற 15-ந் தேதி விசாரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story