மதுரை,
மதுரை உலகநேரியை சேர்ந்தவர் சிவா (வயது 29). அங்குள்ள பழத்தோட்டத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிளஸ்-1 படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி 2 மாதம் கர்ப்பமானார். இது பற்றி அந்த வாலிபரிடம் மாணவி தெரிவித்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.