ஆட்டோவில் பயணித்தவரிடம் செல்போன் பறிப்பு


ஆட்டோவில் பயணித்தவரிடம் செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 9 Sep 2021 6:11 PM GMT (Updated: 2021-09-09T23:41:08+05:30)

மதுரையில் ஆட்டோவில் பயணித்தவரிடம் செல்போன் பறித்த டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 47). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் தஞ்சாவூருக்கு சென்று விட்டு மதுரை மாட்டு்த்தாவணி பஸ்நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கோரிப்பாளையம் மீனாட்சி கல்லூரி அருகே சென்ற போது ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து செந்திலை தாக்கி அவரது செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு விட்டு தப்பினர். உடனே அவர் ஆட்டோ எண்ணை குறித்து வைத்து கொண்டு போலீசில் புகார் அளித்தார். அப்போது ரெயில்வே நிலையம் அருகே ரோந்து வந்த போலீசார் செந்தில் தெரிவித்த ஆட்டோவை கண்டுபிடித்து நிறுத்துமாறு கூறினார்கள். போலீசாரை கண்டதும் அவர்கள் ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரித்தனர். அதில் செல்லூர் கீழத்தோப்பை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் (வயது 28), அவரது நண்பர் திருப்புவனத்தை சேர்ந்த மாரியப்பன் (32) என்பதும், அவர்கள் செல்போன், பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, ஆட்டோ மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
---------


Related Tags :
Next Story