மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்து சிறை காவலர் சாவு + "||" + Death

மயங்கி விழுந்து சிறை காவலர் சாவு

மயங்கி விழுந்து சிறை காவலர் சாவு
மதுரை மத்திய சிறையில் மயங்கி விழுந்து சிறை காவலர் இறந்தார்.
மதுரை,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் திருச்சி மத்திய சிறையில் காவலராக பணியாற்றி வந்தார். நேற்று காலை இவர் ஒரு வேலை தொடர்பாக திருச்சியில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். இங்கு வந்த அவர் திடீரென்று சிறையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சரவணனை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் அறிக்கையில் தான் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். மதுரை மத்திய சிறையில் காவலர் மயங்கி விழுந்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தீக்குளித்தவர் சாவு
தீக்குளித்தவர் இறந்தார்.
2. கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சாவு
கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
3. கார் மோதி படுகாயம் அடைந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் சாவு
கார் மோதி படுகாயம் அடைந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் பரிதாபமாக இறந்தார்.
4. வீட்டில் பிணமாக கிடந்த கோர்ட்டு ஊழியர்
அளவுக்கு அதிகமாக மது குடித்து கோர்ட்டு ஊழியர் வீட்டில் பிணமாக கிடந்தார்.
5. கிருஷ்ணாபுரம் அருகே தீக்காயம் அடைந்த முதியவர் சாவு
கிருஷ்ணாபுரம் அருகே தீக்காயம் அடைந்த முதியவர் இறந்தார்.