பூக்கள் விற்பனை மும்முரம்


பூக்கள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 9 Sep 2021 11:14 PM GMT (Updated: 2021-09-10T04:44:58+05:30)

பூக்கள் விற்பனை மும்முரம்

தர்மபுரி, செப்.10-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவின் போது வீடுகளில் விநாயகரை வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியின் போது நடத்தப்படும் பூஜைகளுக்கு பூக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும்.
இந்த நிலையில் தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் நேற்று திரண்டனர். சாமந்தி, கனகாம்பரம், மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
குறைவு
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களின் விற்பனை சற்று குறைவுதான் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story