காஞ்சீபுரத்தில் ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்


காஞ்சீபுரத்தில் ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 10 Sep 2021 12:11 AM GMT (Updated: 10 Sep 2021 12:11 AM GMT)

காஞ்சீபுரத்தில் ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையம் அருகே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பகுதி மக்களின் நலனுக்காக புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாகவே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க சென்றபோது பொதுமக்களுக்கு தரமற்ற அரிசியை ஊழியர் செல்வம் வழங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் அந்த பகுதி வழியாக மூட்டைகளில் ரேஷன் அரிசி எடுத்து செல்வதாக வெளியில் அமர்ந்து இருந்த பொதுமக்கள் பார்த்து அவர்களை பிடிக்கும் முன் 3 மூட்டைகளை கீழே தள்ளிவிட்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். அந்த மூட்டைகளில் சோதனை செய்த போது அது ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இது குறித்து ரேஷன் கடை ஊழியர் செல்வத்திடம் கேட்டபோது எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். உடனடியாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபுவுக்கு தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அங்கு வந்த அலுவலர் பாபு ரேஷன்கடை ஊழியரிடம் இருப்பு நிலை, விற்பனை உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டபோது முறைகேடு உறுதியானது.

இதனை தொடர்ந்து ரேஷன்கடை ஊழியர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Next Story