பொள்ளாச்சியில் விநாயகர் சிலைகள் கரைப்பு
பொள்ளாச்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் பட்டது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது என்றும், ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்தது.
இதையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலை களை வைத்து வழிபட்டனர். பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தனிநபர் இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சிலைகள் கரைப்பு
மொத்தம் 67 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் வழிபாடு செய்தனர். சிலர் தங்கள் வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.
பின்னர் இந்த சிலைகள் அம்பராம்பாளையம் ஆழியாறு உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு எடுத்துச்சென்று கரைக்கப் பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
வால்பாறை
அதுபோன்று வால்பாறை பகுதியில் கோவில்கள், தனிநபர் இடங்கள் உள்பட 22 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னர் அந்த சிலைகள் அனைத்தும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
கிணத்துக்கடவு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 7 இடங் களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பின்னர் அந்த சிலைகள் அனைத்தும் முத்துக் கவுண்டனூரில் உள்ள குட்டையில் கரைக்கப்பட்டன.
Related Tags :
Next Story