குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 10 Sept 2021 10:04 PM IST (Updated: 10 Sept 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆழியாறு அணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி

தொடர் விடுமுறையையொட்டி குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆழியாறு அணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

குரங்கு நீர்வீழ்ச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் (கவியருவி) தென்மேற்கு பருவமழையின் காரணமாக தண்ணீர் கொட்டுகிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.

 இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

 மேலும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் செல்வதை தடுக்க வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறை யினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது வால்பாறை மலைப்பாதையில் ரோட்டோரத்தில் நின்ற சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அணைக்கு செல்ல தடை

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால், அணை மற்றும் பூங்காவுக்கு செல்ல தொடர்ந்து 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

இதனால் அணை, பூங்கா சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தடையை மீது ஆழியாறு தடுப்பணையில் குளித்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

இதை தொடர்ந்து அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story