248 மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது


248 மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sep 2021 5:57 PM GMT (Updated: 2021-09-10T23:27:54+05:30)

248 மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது

சோழவந்தான்
சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் காடுபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கு மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த விரும்பாண்டி (வயது 57) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 181 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சோழவந்தான் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். கருப்பட்டி ெரயில் நிலையம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த துரைப்பாண்டி(26) என்பவரை கைது செய்து அவரிடம் 25 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் சோழவந்தான் ெரயில் நிலையம் அருகே மதுபாட்டில் விற்றுக்கொண்டிருந்த தீபக்(22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 42 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story