கொரோனாவுக்கு முதியவர் பலி


கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 10 Sept 2021 11:28 PM IST (Updated: 10 Sept 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு முதியவர் பலி

மதுரை
மதுரையில் நேற்று 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 11 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 149 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 5 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 832 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 158 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 69 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1159 ஆக உயர்ந்துள்ளது.

Next Story