வாலிபர் கொலையில் 3 பேர் கைது
திருப்பரங்குன்றம் அருகே நடந்த கோஷ்டி மோதலை தடுக்க சென்ற வாலிபர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே நடந்த கோஷ்டி மோதலை தடுக்க சென்ற வாலிபர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெட்டிக்கொலை
திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கைத்தறி நகர் பாரத ஜோதி காலனியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22). இவர் கடந்த 8-ந்தேதி இரவு ஜெ.ஜெ.நகர் மலைமேட்டு பகுதிக்கு சென்று இருந்தார்.
அப்போது திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த வெங்கடேசன்(38), சரவணன் (32) ஆகியோர் இடையே இருந்த முன்விரோதத்தால் 2 கோஷ்டிகளாக பிரிந்து வாய் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதை கண்ட அருண்குமார், ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று கூறி தடுத்ததாக தெரிகிறது.
இதில் ஒரு தரப்பினர்அருண்குமாரை அரிவாளால் வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் அருண்குமார் இறந்து போனார்.
3 பேர் கைது
இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் சரக மதுரை மாநகர போலீஸ் உதவி கமிஷனர ்சண்முகம் உத்தரவின்பேரில ்திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி வழக்குபதிவு செய்து தலைமறைவான கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் பதுங்கி இருந்த செல்வம்(20), கார்த்திக்குமார் (27), சரவணன் (33), ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story