ஆலங்குடி வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி


ஆலங்குடி வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 11 Sept 2021 12:02 AM IST (Updated: 11 Sept 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

புதிய ரக மோட்டார் சைக்கிளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி ஆலங்குடி வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை, 
புதிய ரக மோட்டார் சைக்கிளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி ஆலங்குடி வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள்
ஆலங்குடி அருகே பூவரசக்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவர் தனது முகநூலில்  புதிய ரக மோட்டார் சைக்கிள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட விளம்பரத்தை பார்வையிட்டார். அதன் லிங்கை அஜித்குமார் கிளிக் செய்த நிலையில் மர்ம ஆசாமி, வாட்ஸ்-அப் மூலம் அஜித்குமாரை தொடர்பு கொண்டார்.
மேலும் தான் ராணுவ வீரர் எனவும், தற்போது விஜயவாடா விமான நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறினார். மோட்டார் சைக்கிளுக்கான பணத்தை கூகுள் பே மூலம் அனுப்ப கூறினார்.
வலைவீச்சு
இதையடுத்து, அஜித்குமாரும் ரூ.44 ஆயிரத்து 500-ஐ அனுப்பினார். ஆனால் தெரிவித்தப்படி மோட்டார் சைக்கிளை அவர் விற்கவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அஜித்குமார் புகார் அளித்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story