விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
வாடிப்பட்டி
வாடிப்பட்டியில் விநாயகர் பக்தர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா கிரட் வளாகத்தில் கொண்டாடப்பட்டது விழாக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முருகவேல், வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். பூசாரி ஜெயராமன் பூஜைகளை செய்தார். ஏற்பாடுகளை விநாயகர் பக்தர் பேரவை பொறுப்பாளர் குருசாமி செய்திருந்தார். அதேபோல் குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய்கரையில் 36 அடி உயர அண்ணாமலையார் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வாடிப்பட்டி வல்லப கணபதி நகரில் உள்ள வல்லபை கணபதிக்கு சிறப்பு பூஜை செய்து அலங்காரம் செய்யப்பட்டது. தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை விநாயகர் கோவிலில் உள்ள இரண்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story