ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி சிக்கியது


ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி சிக்கியது
x
தினத்தந்தி 11 Sept 2021 7:20 PM IST (Updated: 11 Sept 2021 7:20 PM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த இருப்பதாக பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உணவு பொருள் வட்ட வழங்கல் அலுவலர் உமாசங்கரி நேற்று முன்தினம் இரவு சென்னை சென்டிரலில் இருந்து சூலூர்பேட்டை சென்ற மின்சார ரெயிலில் சோதனை மேற்கொண்டார். பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழே ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை ஆந்திராவுக்கு கடத்த இருப்பது தெரியவந்தது.

அதில் இருந்த 1 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றி பொன்னேரி ரெயில் நிலையத்தில் இறக்கப்பட்டு பொன்னேரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அந்த ரேஷன் அரிசி தச்சூர் கூட்டு சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
1 More update

Next Story