வனதியாகிகள் நினைவுத்தூணுக்கு அஞ்சலி
வனதியாகிகள் நினைவுத்தூணுக்கு அஞ்சலி
கோவை
வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் பணியின் போது உயிரிழந்த வனத்துறை ஊழியர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் 11-ந் தேதி வனத்தியாகிகள் தினம் கடைபிடிக்கப் படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் தியாகிகள் தினம் கடைபிடிக் கப்பட்டது. அங்குள்ள நினைவுத்தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
நினைவுத்தூணுக்கு தமிழ்நாடு வன உயிர் பயிற்சியக இயக்குனர் மஞ்சுநாதா, கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் திருநாவுக்கரசு, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
இதில், அண்மையில் பணியின் போது உயிரிழந்த வனக்காவலர் சதீஸ்குமார் குடும்பத்தினரும் பங்கேற்றனர். முன்னதாக காவல்துறை சார்பில் 27 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story