குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கற்பழிப்பு


குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கற்பழிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2021 10:35 PM IST (Updated: 11 Sept 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கற்பழிப்பு

கோவை

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

செல்போன் பேச்சு

கோவை பீளமேட்டை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். 

இவருக்கு கடந்த ஜனவரி மாதம், இன்ஸ்டாகிராம் மூலமாக போத்தனூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வினோத்குமார் (வயது 25) என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டது. 

அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி வந்தனர். இதனால் அவர்களின் நட்பு காதலாக மாறியது. அதன் காரணமாக அவர்கள் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று காதலை வளர்த்து வந்தனர். 

குளிர்பானத்தில் மயக்க மருந்து

இந்த நிலையில், வினோத்குமார், கடந்த மார்ச் மாதம் கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் 2 பேரும் அறை எடுத்து தங்கினார்கள். 

அப்போது வினோத்குமார், அந்த மாணவிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

 அதை குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் அடைந்தார். அந்த நேரத்தை பயன்படுத்தி வினோத்குமார் மாணவியை கற்பழித்து உள்ளார். அதை வினோத்குமார் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து உள்ளார். இதை அறிந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். 

வீடியோ எடுத்து மிரட்டல்

இதையடுத்து, வினோத்குமார், தான் எடுத்த வீடியோவை காட்டி மிரட்டி, அந்த மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக தெரிகிறது. 

ஆனாலும் அவர்கள் 2 பேரும் அவரவர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இதற்கிடையே மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டி கட்டாய திருமணம் செய்ததால் காதலனுடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.

சம்பவத்தன்று மாணவியின் வீட்டிற்கு சென்ற வினோத்குமார், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அந்த மாணவி வர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாணவியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

வாலிபருக்கு வலைவீச்சு

இதில் படுகாயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

இது குறித்த புகாரின் பேரில் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்த வினோத்குமார் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் 

கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா, வழக்கு பதிவு செய்தார். வினோத்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story