மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா


மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Sept 2021 11:20 PM IST (Updated: 11 Sept 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா

மேட்டுப்பாளையம், செப்.12-

மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள பிரபல பள்ளியில் 9 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்தது. 

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு  பரிசோதனை செய்யப்பட்டதில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

இந்த  நிலையில்  75 மாணவர்கள் 57 ஆசிரியர்களுக்கு கொரோனாதொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து கொரோனாபரிசோதனை அறிக்கை வரும்வரை 9,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 நாட்களில் இருந்து  5 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Next Story