மாவட்ட செய்திகள்

வடமாநில தொழிலாளி ரெயில்முன் பாய்ந்து தற்கொலை + "||" + Northern worker commits suicide by jumping in front of a train

வடமாநில தொழிலாளி ரெயில்முன் பாய்ந்து தற்கொலை

வடமாநில தொழிலாளி ரெயில்முன் பாய்ந்து தற்கொலை
வடமாநில தொழிலாளி ரெயில்முன் பாய்ந்து தற்கொலை
கருமத்தம்பட்டி

சூலூரில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட வடமாநில தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

கட்டிட என்ஜினீயர்

கோவை மாவட்டம் வெள்ளலூர் ரோடு சூலூர் அருகே உள்ள பட்டணம் ஊராட்சி காவேரி நகரரை சேர்ந்தவர் முத்துக்குமார். கட்டிட என்ஜினீயர். இவரிடம் பீகார் மாநிலத்தை சேர்ந்த  ராஜேஷ்குமார் தாகூர் (25), 

இவருடைய உறவினரான மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த  சிபு தாகூர் (25) ஆகிய 2 பேரும் கட்டிட வேலை நடைபெறும் வீட்டிற்கு அருகிலேயே தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர். 

கடந்த 4-ந் தேதி இரவு இருவருக்கும்  இடையே நடந்த தகராறில் சிபு தாகூர் குடிபோதையில் ராஜேஷ்குமார் தாகூரை வலது காதின் பின்புறம் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்து விட்டு,  அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

தற்கொலை

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை  போலீசார் சிபு தாகூரை பிடிக்க பீகார் விரைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிபு தாகூர் பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம் தானாப்பூர் அருகே  ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

உறவினரை கொன்றதால் வீட்டிற்கு செல்ல முடியாமலும், போலீசார் தேடுவதால் செய்வது அறியாது திகைத்த சிபு தாகூர்  தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.