சரக்கு ஆட்டோ மீது தனியார் பஸ் மோதல் 2 பேர் காயம்
சரக்கு ஆட்டோ மீது தனியார் பஸ் மோதல் 2 பேர் காயம் அடைந்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இருந்து குள்ளக்காபாளையத்தை நோக்கி ஒரு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. ஆச்சிபட்டியை அடுத்த குள்ளக்காபாளையம் பிரிவில் டிரைவர் வலபுறமாக திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த ஒரு தனியார் பஸ், சரக்கு வாகனம் மோதியது.
இந்த விபத்தில் டிரைவர்கள் இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். அவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்தினால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.
Related Tags :
Next Story