கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது


கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Sept 2021 1:58 AM IST (Updated: 12 Sept 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது

அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 28). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா பாக்கெட்டுகளுடன் இருந்த குபேந்திரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து அவரிடமிருந்த 3½ கிலோ கஞ்சாவையும், மேலும் 6 செல்போன்களையும், இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

Next Story