20 பேருக்கு கொரோனா


20 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Sept 2021 1:58 AM IST (Updated: 12 Sept 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

20 பேருக்கு கொரோனா

மதுரை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடுமையாக இருந்த நிலையில் தற்போது பாதிப்புகள் குறைந்து வருகிறது. மதுரையிலும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு 15-க்கும் குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும், கண்டிப்பாக தகுதியுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று மதுரையில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 13 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 169 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 8 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 5 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 840 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 170 ஆக அதிகரித்துள்ளது. சில தினங்களாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 150-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது அதுவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று 1500 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. இதனை சரிவர பயன்படுத்தி 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story