வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு


வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 11 Sep 2021 8:28 PM GMT (Updated: 2021-09-12T01:58:45+05:30)

வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

மதுரை
மதுரை ஒத்தக்கடை திருமோகூர் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி (வயது 35). சம்பவத்தன்று இவர் குடும்பத்தினருடன், சாயல்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 2¼ பவுன் நகை, வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சேதுபதி அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story