மதுரையில் 18 மையங்களில் நீட் தேர்வு


மதுரையில் 18 மையங்களில் நீட் தேர்வு
x
தினத்தந்தி 11 Sep 2021 8:28 PM GMT (Updated: 11 Sep 2021 8:28 PM GMT)

மதுரையில் 18 மையங்களில் நீட் தேர்வு

மதுரை
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்பு களுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வான நீட் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. இந்த தேர்வுகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. இதற்காக மதுரை மாவட்டத்தில் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மற்றும் தேனியில் தலா ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை 10,341 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். 
தேர்வுகள் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது. இருப்பினும், வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரே நேரத்தில் 15 மாணவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சரிபார்ப்பு, கொரோனா தொற்று பரிசோதனை சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 
இதற்காக காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாணவர்கள் ஒவ்வொரு பிரிவாக தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வுக்கான ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஹம்சபிரியா தெரிவித்தார். 
நீட் தேர்வுக்காக நேற்று தேர்வு மையஙகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Next Story