குளியல் அறை ஜன்னல் கண்ணாடியை கழற்றி வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கைது
குளியல் அறை ஜன்னல் கண்ணாடியை கழற்றி வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கைது.
சென்னை,
சென்னை ஐஸ்-அவுஸ் அங்கமுத்து தெருவைச்சேர்ந்தவர் முகமதுசலீம் (வயது 29). இவர், நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றார். இரவு வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டு பின்பக்கம் உள்ள குளியல் அறை ஜன்னலின் கண்ணாடியை கழற்றி விட்டு, அதன்வழியாக கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த நகை-பணம் மற்றும் மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்களை மூட்டை கட்டி அள்ளிச்சென்று விட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக ஐஸ்-அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவத்தை வைத்து போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர். ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கொள்ளையர்கள் உசேன் (29), நதீம்பாஷா (19), சமியுல்லா (25) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகை-பணம் உள்ளிட்ட கொள்ளை பொருட்கள் மீட்கப்பட்டது.

Related Tags :
Next Story