மாவட்ட செய்திகள்

சென்னை மீனவர் வெட்டிக்கொலை + "||" + Chennai fisherman murdered

சென்னை மீனவர் வெட்டிக்கொலை

சென்னை மீனவர் வெட்டிக்கொலை
சென்னை மீனவர் வெட்டிக்கொலை.
சென்னை,

சென்னை காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்ற அட்டு ரமேஷ் (வயது 44). மீனவரான இவர், 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த சொரிகுப்பன் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்றிருந்தார்.பின்னர் ஜாமீனில் வந்து மற்றொரு வழக்கில் சிறை சென்று கடந்த 3-ந்தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடப்பாக்கத்தில் வாடகை வீட்டில் முதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். வழக்கு ஒன்றில் தினமும் சென்னை காசிமேடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இதற்காக நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்னை காசிமேடு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலை கடப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் ரமேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை விரட்டிச்சென்று கத்தியால் சரமாரியாக தலை, கை போன்ற இடங்களில் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.இதுபற்றி தகவல் அறிந்த சூனாம்பேடு போலீசார், கொலையான ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவான்மியூரில் பயங்கரம் சாலையில் நடந்து சென்ற வாலிபர் வெட்டிக்கொலை
திருவான்மியூரில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
2. சாலையில் நடந்து சென்ற வாலிபர் வெட்டிக்கொலை
திருவான்மியூரில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
3. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்.
4. சொந்த ஊர் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்: சென்னை ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
ஆலங்குளம் அருகே ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
5. யார் பெரிய ஆள்? என்ற போட்டி: பிரபல ரவுடி வெட்டிக்கொலை 8 பேர் கைது
யார் பெரிய ஆள்? என்ற போட்டியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.