கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 12 Sept 2021 10:41 PM IST (Updated: 12 Sept 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கொடைக்கானல்: 

‘மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தொடர் விடுமுறை எதிரொலியாக கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதன்படி நேற்று அதிகாலை முதலே பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் அணி வகுத்து நின்றன. ஏரிச்சாலையின் பல்வேறு இடங்களில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். தகவலறிந்த ேபாலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முத்து பிரசாந்த் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். 


சுற்றுலா பயணிகள் வருகையால் வனப்பகுதியில் உள்ள குணா குகை, பில்லர்ராக், மோயர்பாயிண்ட், பைன் மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் களை கட்டின. பில்லர்ராக் பகுதியில் இயற்கை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனிடையே அதிக சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பேரிஜம் ஏரி, பியர்சோலா அருவி போன்ற சுற்றுலா இடங்களை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story