வடவள்ளியில் ரவுண்டானா அமைக்க முடிவு
வடவள்ளியில் ரவுண்டானா அமைக்க முடிவு
வடவள்ளி
கோவையில் இருந்து மருதமலை செல்லும் சாலையில் வடவள்ளி உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக வடவள்ளி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து வடவள்ளி பகுதியில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே வடவள்ளி பழைய பஸ்நிலையம் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து நெடுஞ்சாலைத் துறையினர் சோதனை செய்தனர்.
இதன் மூலம் போக்குவரத்துக்கு எளிதாக உள்ளதாகவும், நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் செல்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு நிரந்தரமாக ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். அதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளது.
Related Tags :
Next Story